‘இஸ்லாமிய நாட்காட்டி 1445’ இன் அறிவியல்
Posted on♣ ♣ ♣ ♣ ♣
பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். “அவை மக்களுக்கு காலத்தையும், ஹஜ்ஜையும் அறிவிப்பவை” என (நபியே) நீர் கூறும். (2:189)
மகத்துவம் மிக்க அல்லாஹ்வின் அனுமதி கொண்டு, 1445ஆம் ஆண்டிற்கான இஸ்லாமிய நாட்காட்டி 1445 ஐ கணக்கிட்டு வடிவமைத்து வெளியிட்டுள்ளோம். அதன் அறிவியலை இக்கட்டுரை தருகிறது.
இதில் குறிப்பிடப்படுபவை மதுரைக்கான நேரங்களாகும். தமிழ்நாட்டின், கேரளாவின் மற்ற நகரங்களுக்குக் கணக்கிட்டாலும் தேதிகளில் மாற்றம் இருக்காது.
விதிகள்
இந்நாட்காட்டி பின்வரும் விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது:
1. ஒவ்வொரு புதிய நாளும் சூரிய மறைவிலிருந்து துவங்குகிறது.
2. பிறையின் ஒளி (illumination) 0.7 % அளவு இருந்தால் அதை கருவிகளின் துணையின்றி காணமுடியும்.
உதயம்-மறைவு
சூரியன் கிழக்கில் உதயமாகி மேற்கில் மறைகிறது. அதுபோலவே சந்திரனும் தினமும் கிழக்கில் உதயமாகி மேற்கில் மறைகிறது.
எனினும் நேரங்களை பொறுத்தவரை இரண்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. சூரியன் காலையில் உதயமாகி மாலையில் மறைகிறது. ஆனால் சந்திரனின் உதயமும் மறைவும் அப்படியல்ல. பின்வரும் லிங்க் ஐ பார்த்து நீங்கள் அதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்:
https://www.timeanddate.com/moon/india/madurai?month=3&year=2024
சூரிய உதயத்திற்குப் பின்னரே வளர்பிறை உதயமாகிறது. சூரியன் மறைந்த பின்பு அது மறைகிறது. எனவே நம்மால் வளர்பிறையின் உதயத்தை பார்க்க முடியாது. ஆனால் வளர்பிறையின் மறைவை பார்க்க முடியும்.
சூரிய உதயத்திற்கு முன்பே தேய்பிறை உதயமாகிறது. சூரியன் மறைவதற்கு முன்பே அது மறைந்து விடுகிறது. எனவே தேய்பிறையின் உதயத்தை நம்மால் பார்க்க முடியும். ஆனால் தேய்பிறையின் மறைவை பார்க்க முடியாது.
வளர்பிறை (New Moon) தொடக்கம்
சூரியன் ஒரு நெருப்புப் பந்து. அதற்கு சுயமாக ஒளி உண்டு. சந்திரன் ஒரு மண் கோளம். அதற்கு சுய ஒளி இல்லை. சூரியனின் ஒளி சந்திரன் மீது பட்டு பிரதிபலிக்கிறது. அதையே நிலவொளி என்கிறோம்.
புவி மைய இணைப்பு (Geocentric conjunction) வானில் நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும். இந்நிகழ்வு (New Moon) இது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நேரத்தில் நிகழ்கிறது.
உம்முல் குரா நாட்காட்டி
இன்றைய காலத்தில் அரசு, நிர்வாக காரணங்களுக்கு, விடுமுறை அளிப்பதற்கு நாட்காட்டி கட்டாயத் தேவையாகும். சவூதிகளின் உம்முல் குரா காலண்டர் ஹிஜ்ரி 1423 முதல் பின்வரும் இரு விதிகளைக் கொண்டு உள்ளது: 1. புவி மைய இணைப்பு (conjuction) சூரிய மறைவுக்கு முன் நிகழ வேண்டும். 2. சூரியனுக்குப் பின் சந்திரன் மறைய வேண்டும்.
இங்கு ‘பிறை பார்ப்பதற்கான சாத்தியம்’ என்பது விதியாக இல்லை. இணைப்பு (conjuction) தொடங்கி ஒளி சுமார் 17 மணி நேரம் வளர்ந்த பின்புதான் பிறையை நம்மால் காண முடியும்.
எனினும் உம்முல் குரா காலண்டர் அடிப்படையில்தான் சவூதிகள் ரமழான் நோன்பு, பெருநாள், எல்லாவற்றிற்கும் மேலாக ஹஜ்ஜை அறிவிக்கிறார்கள்.
ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டு ரமழான், ஷவ்வால், துல் ஹஜ் மற்றும் 1446 ஆம் ஆண்டின் முஹர்ரம் மாதங்கள் குறித்து நாம் ஆய்வு செய்வோம்:
1. இந்த 1445 ஆம் ஆண்டு ரமழான் மக்கா நேரப்படி 10-03-24 அன்று மதியம் 12.00 மணிக்கு வளர்பிறை தொடங்குகிறது. 10-03-24 அன்று பிறை பார்ப்பது சாத்தியமே இல்லை. எனினும் பிறை பார்ப்பதாக பாசாங்கு செய்தார்கள். பின்பு பார்த்து விட்டதாகவும் 11-03-24 அன்று ரமழான் நோன்பு தொடங்குவதாகவும் சவூதிகள் அறிவித்தார்கள்.
2. 08-04-24 அன்று மாலை பிறை பார்க்கச் சொல்லி அறிவிப்பு வெளியிடுகிறார்கள். மக்கா நேரப்படி அன்று இரவு 09.20க்குத்தான் ஷவ்வால் பிறை (New Moon) தொடங்குகிறது.
3. இந்த 1445 ஆண்டின் துல்ஹஜ் மாதம் வளர்பிறை (New Moon) 06-06-24 அன்று மக்கா நேரப்படி மதியம் 03.27 க்கு நிகழ்கிறது. அன்று சூரிய மறைவு மாலை 07.01. சந்திரன் மறைவு மாலை 07.12. பிறையின் ஒளி 0.1 அளவுதான் இருக்கும். அதைப் பார்ப்பது சாத்தியமே இல்லை. எனினும் பிறை பார்த்ததாகக் கூறி ஹஜ்ஜை அறிவிக்கிறார்கள். உம்முல் குரா காலண்டரில் 07-06-24 என்று உள்ளதை செயலுக்குக் கொண்டு வருகிறார்கள்.
சவூதிகள் ஏற்படுத்தும் குழப்பம் மிகப் பெரியதும் பாரதூரமானதும் ஆகும். ஹஜ்ஜையும் அவர்கள் இந்த காலண்டரின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கிறார்கள். பிறை பார்ப்பதாகச் சொல்வதெல்லாம் உண்மையல்ல.
நமக்கும் அரேபியாவிற்கும் 2.30 மணி நேர வேறுபாடுதான். சவூதிகளின் மேற்படி பிறை அறிவிப்பால் முஸ்லிம் சமூகம் அங்கு முதல் நாள், இங்கு அடுத்த நாள் என்று கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹிஜ்ரி கமிட்டி
அலீ மனிக்ஃபான் என்பவர் (இவருக்கு 2021 ஆம் ஆண்டு சங்கிகள் பத்மஸ்ரீ விருது வழங்கினர்) ஒரு சந்திர காலண்டரை உருவாக்கியுள்ளார். அதை தமிழ்நாட்டில் சிலர் பரப்புகின்றனர். இதில் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் மாறாக ‘நாள் என்பது பகலில் தொடங்குகிறது’ என்கின்றனர். இதனால் ஏற்படும் குழப்பம் என்ன என்பதைப் பார்ப்போம்:
1. இந்த 1445 ஆம் ஆண்டு ஷவ்வால் பிறை மதுரை நேரப்படி 08-04-24 அன்று இரவு 11.50 க்குத் தொடங்குகிறது. காலையிலிருந்து நாள் தொடங்குகிறது என்ற அடிப்படையில் 09-04-24 அன்று ‘நோன்புப் பெருநாள்’ என்றார்கள்.
(ஜாக் (J.A.Q.H.) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் 10-04-24 அன்றும் சுன்னத் வல் ஜமா அத் 11-04-24 அன்றும் பெருநாள் கொண்டாடினார்கள்)
Judeo-Christian ministry Worlds Last Chance ஒரு சந்திர காலண்டரை வெளியிட்டுள்ளார்கள். அது பின்வரும் இரு அளவுகோல்களைக் கொண்டது: 1. நாள் என்பது காலையில் (dawn) தொடங்குகிறது. 2. இணைப்பு நாளின் ( conjunction) அடுத்த நாள் சந்திர மாதத்தின் முதல் நாள். இதே அளவுகோல்களின் படியே அலீ மணிக்ஃபானின் காலண்டரும் இருக்கின்றது.
மேலும் அறிய:
The Umm al-Qura Calendar of Saudia Arabia
♣ ♣ ♣ ♣ ♣