‘இஸ்லாமிய நாட்காட்டி 1443’ இன் அறிவியல்
Posted onபிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். “அவை மக்களுக்கு காலத்தையும், ஹஜ்ஜையும் அறிவிப்பவை” என (நபியே) நீர் கூறும். (2:189)
அல்லாஹ்வின் அனுமதி கொண்டு, 1443 ஆம் ஆண்டிற்கான இஸ்லாமிய நாட்காட்டியை வடிவமைத்து இவ்வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளோம்.
https://www.mellinam.in/islamic-calendar-1443
இந்நாட்காட்டி குறித்த விபரங்களை இக்கட்டுரை தருகிறது.
இதில் (படம் 1) குறிப்பிடப்படுபவை மதுரைக்கான நேரங்களாகும். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்குக் கணக்கிட்டாலும் தேதிகளில் மாற்றம் எதுவும் இருக்காது.
இந்நாட்காட்டி பின்வரும் விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது:
1. ஒவ்வொரு புதிய நாளும் சூரிய மறைவிலிருந்து துவங்குகிறது.
2. பிறையின் ஒளி (illumination) 0.5%, அதற்கும் அதிகமாக இருந்தால் அதை கருவிகளின் துணையின்றி காணமுடியும்.
சூரியன் கிழக்கில் உதயமாகி மேற்கில் மறைகிறது. அதுபோலவே சந்திரனும் கிழக்கில் உதயமாகி மேற்கில் மறைகிறது.
எனினும் நேரங்களை பொறுத்தவரை இரண்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. சூரியன் காலையில் உதயமாகி மாலையில் மறைகிறது. ஆனால் சந்திரனின் உதயமும் மறைவும் அப்படியல்ல (படம் 2).
சூரிய உதயத்திற்குப் பின்னரே வளர்பிறை உதயமாகிறது. சூரியன் மறைந்த பின்பு அது மறைகிறது. எனவே நம்மால் வளர்பிறையின் உதயத்தை பார்க்க முடியாது. ஆனால் வளர்பிறையின் மறைவை பார்க்க முடியும்.
சூரிய உதயத்திற்கு முன்பே தேய்பிறை உதயமாகிறது. சூரியன் மறைவதற்கு முன்பே அது மறைந்து விடுகிறது. எனவே தேய்பிறையின் உதயத்தை நம்மால் பார்க்க முடியும். ஆனால் தேய்பிறையின் மறைவை பார்க்க முடியாது.
சூரியன் ஒரு நெருப்புப் பந்து. அதற்கு சுயமாக ஒளி உண்டு. சந்திரன் ஒரு மண் கோளம். அதற்கு சுய ஒளி இல்லை. சூரியனின் ஒளி சந்திரன் மீது பட்டு பிரதிபலிக்கிறது. அதையே நிலவொளி என்கிறோம்.
சூரிய ஒளி சந்திரனில் படுகிறது; வளர்ந்து செல்கிறது. பின்னர் தேய்ந்து கொண்டே வந்து மறைகிறது. அதை அமாவாசை என்றுக் கூறுகிறோம். பின்பு மீண்டும் சூரிய ஒளி சந்திரனில் பட்டு பிரதிபலிக்கத் தொடங்குகிறது. இதுவே வளர்பிறை தொடக்கம் (New Moon) ஆகும். இது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நேரத்தில் நிகழ்கிறது. பகலிலும் நிகழும்.
இதிலிருந்தே அறிவியல் ரீதியாகப் பிறையின் வயதைக் கணக்கிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, 08-08-21 அன்று மாலை 19:20க்குத் தொடங்கும் பிறை (New Moon) 29.46 நாட்களைக் கொண்டதாகும்.
நாம் பிறை தென்படுவதை வைத்து ‘ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டது’ எனக் கணக்கிடுகிறோம்.
சூரியன் சுயமாகவே ஒளி உடையது என்பதால் இது போன்ற நிகழ்வு சூரியனில் ஏற்படுவது இல்லை. எனவே சூரியனை வைத்து மாதத்தை கணக்கிட இயலாது.
எல்லா மாதங்களிலும் அமாவாசையின்போது சந்திரன் முழுமையாக ஒளியில்லாமல் இருப்பதில்லை. சில மாதங்களில் 0.1%, சில மாதங்களில் 0.2% அளவு ஒளி இருக்கிறது.
‘ஹிஜ்ரி கமிட்டி’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் செயல்படும் சிலர் ‘ஹிஜ்ரி காலண்டர்’ ஒன்றை வெளியிடுகின்றனர்.
அவர்கள் ‘ஒவ்வொரு புதிய நாளும் சூரிய உதயத்திலிருந்து தொடங்குகிறது’ என்றுக் கூறுகிறார்கள். அதற்காக நேர்மையற்ற வாதங்களை முன் வைக்கிறார்கள். அவர்களின் செயல்பாடு சமூகத்தில் குழப்பம் (ஃபஸாத்) செய்வதன்றி வேறில்லை.
https://www.mooncalc.org
https://www.suncalc.org
https://www.timeanddate.com