ஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி
Posted onஇந்நூல் எமது காலத்தில் வாழும் பெண்களோடு தொடர்புடைய சட்டவியல் கருத்துகள் (ஃபத்வா) சிலவற்றை அடக்கியுள்ளது. அனைத்தும் நமது காலத்தில் வாழும் பெண்களோடு தொடர்புடையவை.
பெண் குறித்த வாதப் பிரதிவாதங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவை ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியன. குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெண்ணுக்குள்ள பாரிய பங்களிப்பே அதற்கான காரணமாகும். பெண் சீராக அமையாவிட்டால் குடும்பம் சீர்பெறாது; சமூகமும் சீர்பெறமாட்டாது. இதற்கு முன் வெளிவந்த இன்னொரு சிறுநூலில் மனிதன், பெண், தாய், மகள், மனைவி, சமூக அங்கத்தவர் என்ற வகையில் பெண்ணின் அந்தஸ்து என்ன என்பதை விளக்கி னோம். இன்னொரு நூலில், நூதனம் (பித்ஆ) எனக் கூறுபவர்களுக்கும் வாஜிப் எனக் கூறுபவர்களுக்கும் இடையில் முகத்தை மூடி அணியும் பர்தா என்ற கருத்தை விளக்கினோம்.
இந்நூலில் அடங்கியுள்ள கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் இக்காலப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மிகத் தேவையானவை. அதாவது, மார்க்க விஷயத்தில் கவனம் செலுத்துபவர்கள், தங்கள் இரட் சகனைத் திருப்திப்படுத்த வேண்டும் என விரும்புவோர், இறைவன் ஆகுமாக்கியவை எவை, தடை செய்தவை எவை எனக் கவனம் செலுத்துவோருக்கு இத்தீர்வுகள் மிகவும் அவசியமானவை.
‘பெண்கள் ஒரு பெரும் சோதனை’, ‘ஆண்களைப் பொறுத்தவரையில் மிகக் கூடுதலாகத் தீங்கு தரும் சோதனையாக பெண்களே உள்ளார்கள்’ போன்ற வாதங்களின் பொருளென்ன? சில மார்க்க பக்தி கொண்டோர் மத்தியில் பரவலான கருத்தாகக் கொள்ளப்படுகின்ற பெண்ணின் குரல் மறைக்கப்பட வேண்டிய ஒன்று என்பது உண்மையா?
ஓர் ஆண் பெண்ணைப் பார்ப்பது, பெண் ஆணைப் பார்ப்பது பற்றி இஸ்லாத்தின் தீர்வு என்ன?
பெண்களுக்கு ஸலாம் சொல்லலாமா? குறிப்பாக அண்டை வீட்டார், ஆசிரியர் போன்ற உறவு கொண்டோரைப் பொறுத்தவரையில் இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?
திருமணம் முடிக்க ஆகுமான ஒரு நோயாளியான ஆணை ஒரு பெண் நோய் விசாரிக்கச் செல்லலாமா? அவ்வாறே ஓர் ஆண் நோயாளியான ஒரு பெண்ணைப் பார்க்கச் செல்லலாமா?
ஒரு பெண் வீட்டுக்கு வெளியே தொழில் செய்வது குறித்து இஸ் லாத்தின் தீர்வென்ன? அது ஆகுமாயின் இஸ்லாம் அதற்கு விதிக்கும் கட் டுப்பாடுகள் யாவை?
மார்க்கப் பற்றுக் கொண்ட தனது மறுமை வாழ்வு குறித்து மிகுந்த கவனம் செலுத்தும் எந்த முஸ்லிம் பெண்ணும் இக்கேள்விகளை முக்கியமானதாகக் கருதுவாள்; பதிலைத் தேடுவாள். தான் நம்பிக்கை வைக்கின்ற இஸ்லாமிய அறிஞரிடத்தில் இதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புவாள்.
அல்-குர்ஆன், சுன்னாஹ்வின் அடிப்படையில் மனித நலன்களை நிறைவு செய்வதில் ஷரீஆவின் நோக்கங்களைக் கவனத்தில் கொண்டு இங்கு நாம் இக்கேள்விகளுக்கு பதில்களை வழங்கியுள்ளோம். மனி தர்களை வைத்து சத்தியத்தை அறியக்கூடாது. சத்தியத்தின் மூலமே மனிதர்களை அளவிட வேண்டிய மனோ நிலையில் இவற்றை நீங்கள் வாசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஃபத்வா வழங்கும்போது இலகுபடுத்தலை நாம் கவனத்தில் கொள் வதைப் பார்த்து நாம் யாருடையவாவது மனோ இச்சைகளைப் பின்பற் றுகிறோம் என நினைத்துக் கொள்ள வேண்டாம். ஷரீஆ கடினப்படுத் துவதன் மீதல்ல இலகுபடுத்தலின் மீதே அமையப் பெற்றுள்ளது. திட்டவட்டமாக கடினப்படுத்துதல் அதன் சட்டங்களுக்குப் புறம்பா னது என்பதுதான் இந்த முறையை நாம் கடைபிடிக்கக் காரணம். ஓர் அறிஞர் ஷரீஆவை ஆழ்ந்து கற்கக் கற்க அதன் இலகுத்தன்மை அவ ருக்குப் புரிகிறது. எல்லாக் காலங்களிலும் இடங்களிலும் வாழும் மனிதர்களின் தேவைகளை அது முழுமையாக நிறைவு செய்கிறது என்றும் அவரால் புரிய முடியும். இதனை நாம் ஆழ்ந்து ஆராய்ந்த போது புரிந்து கொண்டோம். இமாம் இப்னு கையிமின் வாசகத்தில் சொன்னால் ஷரீஆ பின்வருமாறு அமைந்துள்ளது:
அது ஒரு முழுமையான அருள்; முழுமையான நீதி; முழுமையான ஞானம்; முழுக்க முழுக்க நலன்களின் மீது அமைந்துள்ளது. ஏதாவதொரு தீர்வு அருள் என்ற பண்பை விட்டு அதற்கெதிர் நிலைக்குச் செல்லுமானால், நீதியை விட்டு அநீதியைத் தருமானால், ஞானத்தை விட்டு விளையாட்டாக அமையுமானால், நலன் பயத்தலை தவிர்த்து தீங்கு விளைவிக்குமானால் வலிந்து, விளக்கங்கள் கொடுத்து ஷரீஆவின் உள்ளே புகுத்த முயற்சி எடுக் கப்பட்டிருப்பினும் அது ஒருபோதும் ஷரீஆவைச் சேர்ந்ததாக மாட்டாது.
இறைவா! வானங்கள் பூமியைப் படைத்தவனே. புலன்களுக்கு உட்பட்டவற்றையும் மறைவானவற்றையும் அறிந்தவனே! நீ உன்னு டைய அடியார்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண் டுள்ள விஷயங்களில் தீர்ப்பளிக்கிறாய். உன்னருளால் — சத்தியத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பகுதிகளில் — எம்மை நேர்வழி நடத்துவாயாக. நிச்சயமாக நீ விரும்பியோரை நேரான வழிக்கு நீ இட்டுச் செல்கிறாய்.
– யூசுஃப் அல்-கர்ளாவி [ஹி. 1416, அக்டோபர் 1995]
Exalted
Good