இஸ்லாமிய பண்பாட்டு மத்திய நிலையங்கள் – டாக்டர் எம்.ஏ.எம்.சுக்ரி
Posted onஅரபுத் தீபகற்பத்தில் தோன்றிய இஸ்லாம், கால வளர்ச்சியில் ஒரு ஆட்சி யாகப் பரிணமித்து பண்பாடாகவும், நாகரிகமாகவும் வளர்ச்சியடைந்தது. நாகரிக வளர்ச்சிக்குப் பல்வேறு இனங்கள் தங்களது பங்கினைச் செலுத்தியமை போன்றே இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியினடியாகத் தோன்றிய பல நகரங்களும் முக்கிய பங்கு வகித்தன. இந்நூல் இஸ்லாமிய நாகரிக வளர்ச்சிக்குப் பண்பாட்டு மத்திய நிலையங்கள் என்ற வகையில் இந்நகரங்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராய்கின்றது. இஸ்லாமிய நாகரிகத்தின் பரவல், வியாபகம், அதன் சர்வதேசியத் தன்மை, கலாச்சாரப் பங்களிப்பு என்பன பற்றிப் புரிந்துகொள்வதற்கு மக்கா, மதீனா, கூபா, பஸ்ரா, டமஸ்கஸ், பக்தாத் போன்ற நகரங்களின் வளர்ச்சியின் பின்னணியில் இஸ்லாமிய நாகரிகத்தின் வளர்ச்சியை அணுகுதல் துணைபுரியும். இந்நோக்கிலேயே இஸ்லாமிய நாகரிகத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் சமர்ப்பிக்கப்படுகின்றது.
– டாக்டர் எம்.ஏ.எம். சுக்ரி